06,Jul 2020 (Mon)
  
இந்திய செய்தி

மோடி – ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை என தகவல்!

அண்மைக்காலமாக பிரதமர் மோடி – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே டுவிட்டர் பதிவுகள், கொரோனா குறித்த பேச்சுக்கள், சீனாவின் மீதான அதிருப்தி எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கிய ட்ரம்ப உலகத் தலைவர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார்.

இந்நிலையில் சீனா இந்தியா நாடுகளிடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனைக் குறித்துப் பேசிய ட்ரம்ப், இரு நாடுகளிடையே சமரசம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், சீனா விவகாரத்தில் மோடி அதிருப்தியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மோடி குறித்தான ட்ரம்பின் பேச்சுக்கு விளக்கமளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அண்மைக் காலங்களில் பிரதமர் மோடி – ட்ரம்ப் இடையே எந்த பேச்சும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர்




மோடி – ட்ரம்ப் இடையே எந்தப் பேச்சும் நடைபெறவில்லை என தகவல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment






செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு