07,Jul 2020 (Tue)
  
US
சமையல்

சர்க்கரை நோயாளிகளுக்கான வேப்பம்பூ சூப்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வேப்பம்பூ சூப் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேப்பம் பூ – 4 டீஸ்பூன்,

வெண்ணெய் – 4 டீஸ்பூன்,

காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் – 1 கப்,

எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு – 4 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம்பூவைப் போட்டு வறுக்கவும்.

* வேப்பம் பூ நன்கு வறுபட்டதும் இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.

* பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும்.

* இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம்.

* கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சூப் இது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒருமுறை இந்த சூப்பை குடித்து வரலாம்.





சர்க்கரை நோயாளிகளுக்கான வேப்பம்பூ சூப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment






செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு