29,Apr 2024 (Mon)
  
CH
ஆரோக்கியம்

ஊட்டச்சத்திற்கும் மன நலனுக்கும் நெருங்கிய தொடர்பு-ஆய்வில் தகவல்

நாம் சாப்பிடும் உணவிற்கும் மனச்சோர்விற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆமாம், இருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் மனச்சோர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்விற்காக 42 முதல் 62 வயது வரையிலான பெண்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களது வயது, உணவுப் பழக்கம், இதர உடல்நலக் கோளாறுகள், தூங்கும் நேரம் ஆகியவை இந்த ஆய்விற்காக சேகரிக்கப்பட்டன. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இந்தப் பெண்களுக்கு மனசோர்வு நோய் அதிகரிக்கிறது என்பதுதான் இந்த ஆய்வின் கருதுகோள். துரதிஷ்டவசமாக, அவர்கள் நினைத்தது போல் மனச்சோர்விற்கும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே அய்வின் முடிவும் இருந்துள்ளது.

இன்ஸ்டண்ட் உணவுகள் முதல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வரை என ஒன்பது வகைகளில் உணவுகள் பிரிக்கப்பட்டு, கடந்த நான்காண்டுகளில் இந்த உணவுகளில் எதையெல்லாம் சாப்பிட்டுள்ளீர்கள் என கேள்வி-பதில் வடிவில் சர்வே ஒன்றை நிரப்பி தருமாறு பெண்களிடம் கூறியிருந்தார்கள்.


சரி, எந்த உணவெல்லாம் மனச்சோர்வை அதிகப்படுத்துகிறது? பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த சோதனையை நீங்களே கூட செய்து பார்க்கலாம். உங்கள் வீட்டு சமையலறையை சென்று பாருங்கள். உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால், அதில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தான் அதிகம் இருக்கும், அப்படிதானே. இதில் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்ட சில உணவுகளும் குளிர் பானங்களும் உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். நூடுல்ஸ், சிப்ஸ், செரல்ஸ் என இந்தப் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஊட்டச்சத்திற்கும் மன நலனுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இது முக்கியமானது மட்டுமல்ல; நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியமாகும். பதப்படுத்தப்படாத உணவுகளை சமைப்பது மிகவும் எளிதாகும். போதிய நேரம் இல்லாதவர்கள் மற்றும் ஃபிரெஷான உணவுகள் கிடைக்காதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் புதிதாக சமைப்பது சிரமமாகும். ஆகவே, உங்கள் மன நல பிரச்சனைகளை தூண்டாத குறிப்பிட்ட உணவுகளிலிருந்து இதை நீங்கள் சாப்பிட தொடங்கலாம்.




ஊட்டச்சத்திற்கும் மன நலனுக்கும் நெருங்கிய தொடர்பு-ஆய்வில் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு