கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவின் வென்சு நகரத்தை, மூடுவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வைரஸ் தொற்றை தடுப்பதற்கு சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் வுஹானில் இருந்து 800 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வென்சு நகரத்தை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வுஹானில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ள 250 பிரானஸ் பிரஜைகளில் 20 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் வைரஸ் தொற்று குறித்த பரிசோனை அறிக்கை கிடைத்த பின்னரே அது தொடர்பில் உறுதியாக கூறமுடியும் என பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 57 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சீனாவின் வுபே மாகாணத்திலேயே உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு 2 ஆயிரத்து 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் சுகாதார ஆணைக்கழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உலகளவில் கொரோனா வைரஸ்ஸால் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்;.
அதேநேரம் சீனாவை தவிர 24 நாடுகளில் இந்த கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேவேளை 2002 மற்றும் 2003 ஆண்டுகளில் பரவிய சார்ஸ் தொற்றினால் 349 பேர் பலியாகியிருந்தனர்.
அதேநேரம், வியட்நாமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீனாவின் வுஹான் நகரில் உள்ள தமது பிரஜைகளை அங்கிருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
89 மாணவர்கள் உள்ளடங்களாக 243 பேர் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..