11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

வாக்காளர்கள் ஓட்டுபோட இலவச விமான டிக்கெட் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஓட்டுப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் வாக்காளர்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி ஓட்டு போடுவதற்கு வசதியாக இலவச விமான டிக்கெட்டை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஜய்சிங் கூறியதாவது:-

வாக்களிப்பது ஜனநாயகத்தின் முக்கிய கடமை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது மக்களில் பலர் சொந்த இடத்தில் இருந்து விலகி வெளியூர்களில் வேலை பார்க்கின்றனர். இதனால் அவர்களால் ஓட்டு போடும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.

எனவே டெல்லி வாக்காளர்கள் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க உதவவும், எல்லைகள் கடந்து எங்கிருந்தும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லவும் எங்கள் நிறுவனம் இலவச டிக்கெட் வழங்குகிறது.

இதற்காக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எங்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பதிவு பக்கத்தில் முன்னதாகவே பதிவு செய்திருக்கவேண்டும். இதன் அடிப்படையில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயண டிக்கெட் வழங்கப்படும்.

பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் அன்று வாக்காளர்கள் வந்து அதே நாளில் திரும்ப தயாராக இருந்தால் அவர்களுக்கு திரும்புவதற்கான டிக்கெட்டும் சேர்த்து இலவசமாக வழங்கப்படும். மாறாக பிப்ரவரி 7-ந் தேதியே வருவதாக இருந்தாலோ அல்லது ஓட்டு போட்டுவிட்டு மறுநாள் (9-ந் தேதி) திரும்புவதாக இருந்தாலோ அவர்களுக்கு ஒரு நேரத்துக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்.




வாக்காளர்கள் ஓட்டுபோட இலவச விமான டிக்கெட் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு