15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய தேசிய கொடி!

நேற்று கொண்டாடப்பட்ட இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய தேசிய கொடி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அவிசாவளை மாணியங்கம ரஜ மஹா விகாரையின் பௌத்த சங்கம் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து இந்த தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். 

50 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட இந்த தேசியக் கொடியை வடிவமைப்பதற்காக 120 யார் துணியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு வடிவமைக்கப்பட்ட அந்தத் தேசியக் கொடி, கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்தில் உள்ள யகஹடுவ மலையில் நேற்று பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 




சுதந்திர தினத்தை முன்னிட்டு மிகப்பெரிய தேசிய கொடி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு