09,Jul 2025 (Wed)
  
CH
உலக செய்தி

கனடாவின் காட்டுத்தீப் புகையால் கடும் காற்று மாசுபாடு: வெளியில் செல்லவேண்டாமென அறிவித்தல்

காட்டு தீயால் வெளியேற்றும் புகைக்காரணமாக் கனடா டொரண்டோ மற்றும் தென் ஒன்ராறியோ (Ontario) மாகாணம் முழுவதும் காற்றின் தரமானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தாக்கம் சுற்று சூழலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் பாதைகளை தெளிவாக பார்வையிட முடியாது,என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், புகை அதிகமாகப் பரவும் நேரங்களில், பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளனர்.


அத்துடன், விளையாட்டு, முகாம்கள், வெளியிட நிகழ்வுகள் போன்றவற்றை குறைக்கவோ மாற்றியமைக்கவோ பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.


காற்றுமாசு காரணமாக கண்ணீர், தொண்டை சிரமம், தலைவலி மற்றும் இலகுரக இருமல் போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரவித்துள்ளனர். 


இந்த புகை கனடாவின் சில பகுதிகளைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






கனடாவின் காட்டுத்தீப் புகையால் கடும் காற்று மாசுபாடு: வெளியில் செல்லவேண்டாமென அறிவித்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு