இன்று (வெள்ளிக்கிழமை) தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை (ஜூலை 19, சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து வாங்குவதற்கான நிதி திரட்டும் நோக்கில் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் களியாட்ட நிகழ்வாக இல்லாமல், மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவ சமூகத்தை மேம்படுத்தும் நிகழ்வாக அமையும் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஸ்ரீநிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீநிவாஸ், ஈழத்து பாடகி கில்மிசா, மற்றும் அக்சயா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வந்தடைந்த கலைஞர்களை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
0 Comments
No Comments Here ..