முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க பிறப்பித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் அளித்த வாதங்களை ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கி, அரசாங்கத்திற்கு 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்து ராஜித சேனாரத்ன இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
0 Comments
No Comments Here ..