01,May 2024 (Wed)
  
CH
சினிமா

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட்

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் புதிய வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி மூலம் உலகளவில் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். சூழலியல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் உலக அளவிலான பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். அந்த வரிசையில் இந்தியாவில் இருந்து பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பியர் கிரில்ஸ் உடன் வனப்பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டனர். 

அதேபோல கடந்த ஜனவரி மாதம் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கும் #IntoTheWild நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என டிஸ்கவரி தொலைக்காட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் வனப்பகுதியில் தொகுப்பாளருடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. யானை, புலிகள் நடமாடும் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் நடந்து செல்வது போன்றும் கார் ஓட்டி வருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.




நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு