24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கு வேண்டும்- ஜனாதிபதி

கஷ்டங்களுக்கு மத்தியில் பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஏனைய நாடுகளையும் விஞ்சும் வகையில் மக்களின் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தது முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை பேணிய வகையில் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.




பேதங்களின்றி மக்களுக்கு நிவாரணங்களை வழங்கு வேண்டும்- ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு