இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது. வெளியே தெரியும் விஷயங்களே பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சில விஷயங்கள் தெரியாமல் மறைமுகமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் மக்களிடம் பிரபலம் அடைவதோடு, சில சினிமா வாய்ப்புகளும் வருதால் போட்டியாளர்களாக பங்கேற்க நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையே, நடிகை ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க, இப்படியும் செய்ய சொல்கிறார்கள், என்று சில விஷயங்கள் பற்றி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நடிகை வேறு யாருமில்லை, மீ டூ புகழ் ஸ்ரீரெட்டி தான். தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பரபரப்பு செக்ஸ் புகார் கூறியவர், தற்போது சென்னையில் முகாமிட்டு சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்பதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் இதுநாள் வரை பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க தனக்கு அழைப்பு வந்தும், தான் ஏன் பங்கேற்கவில்லை, என்பது குறித்து ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். அதில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பது குறித்து பேச ஒரு ஹோட்டலுக்கு அழைக்கப்பட்ட ஸ்ரீரெட்டியிடம் ஒருவர் பேட்டி எடுத்தாராம்.
அவர், ”பிக் பாஸ் வீட்டில் ஒரு ஆண் நண்பரை ஜோடியாக தேர்ந்தெடுத்து, கேமரா ஓடிக்கொண்டிருக்கும் போதே, அவருடன் பிளாங்கெட்டாக உங்களால் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டாராம். அதற்கு ஸ்ரீரெட்டி மறுப்பு தெரிவிக்க, குட்டையான கவர்ச்சியாக உடை அணிய முடியுமா? என்று அடுத்த கேள்வி கேட்டாராம். அதற்கு ஸ்ரீரெட்டி ஓகே சொன்னாராம்.
பிறகு, ஸ்ரீரெட்டியின் உடல் பாகங்களின் சைஸ் குறித்து அந்த நபர் கேட்க, அதிர்ச்சியான ஸ்ரீரெட்டி, ”இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்று யோசிக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வந்துவிட்டாராம்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இப்படியெல்லாம் செய்துதான் அந்த வீட்டுக்குள் போகிறார்கள், என்றால் அதற்கு அவர்கள் சும்மா இருக்கலாம், என்றும் ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார்.
0 Comments
No Comments Here ..