அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பின மனிதரான ஜோர்ஜ் ஃபிளொய்டின் மரணத்திற்கு நீதிகோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
எதிர்ப்பு போராட்டம், வன்முறை, கலவரம் என அமெரிக்கா பற்றியெறிந்து வருகிறது.
ஜோர்ஜ் ஃபிளொய்டின் மரணம் நடந்த மினியாபொலிஸ் பகுதியில் நேற்று மக்கள் வீதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வெள்ளையன் ஒருவன் போராட்டக்காரர்கள் மத்தியில் லொறியை வேகமாக செலுத்தினான்.
நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்த வீதியில் வெள்ளையன் அவர்களை மோதுவதை போல வேகமாக லொறியை செலுத்தினான்.
இதனால் போராட்டக்காரர்கள் அலறியடித்தபடி விலகி வழிவிட்டனர். எனினும், பின்னர் போராட்டக்காரர்கள் லொறியை நிறுத்தி, சாரதியை வெளியே இழுத்தெடுத்து நையப்புடைத்து, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
0 Comments
No Comments Here ..