20,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

குழந்தை பாலியல் எண்ணங்களில் இருந்து விடுபட விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

முடக்கநிலையின் போது குழந்தைகளைப் பற்றிய பாலியல் எண்ணங்களிலிருந்து விடுபட, உதவி கோருபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

குழந்தைகளை சுரண்ட விரும்புவோருக்கு முடக்கநிலை ஒரு ‘குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான’ வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக பிரச்சாரகர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிகரித்த தனிமை, மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மையால், தீங்கு விளைவிக்கும் தூண்டுதல்களினால் அதிகமான மக்கள் செயற்படக்கூடும் என கூறப்படுகின்றது.

பிரித்தானியாவில் 300,000பேர் குழந்தைகளுக்கு பாலியல் அச்சுறுத்தலாக இருப்பதாக பிரித்தானிய தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

லூசி ஃபெய்த்புல் அறக்கட்டளை என்பது பிரித்தானிய தொண்டு நிறுவனமாகும், இது வயதுவந்த துஷ்பிரயோகம் செய்பவர்கள் உட்பட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயற்படுகிறது.

முன்னதாக, தேசிய குற்றவியல் நிறுவனம் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




குழந்தை பாலியல் எண்ணங்களில் இருந்து விடுபட விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு