18,Apr 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

  • மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்

ரிஷபம்

  • ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மதிப்பு கூடும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறை வேறும் நாள்.

கடகம்

  • கடகம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பாகள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .

சிம்மம்

  • சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்புலாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதி காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். பெற்றிபெறும் நாள்.

கன்னி

  • கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

  • துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி செய்கிறேன் என்று சொல்லிகூட இருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். சொந்த பந்தங்க ளுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக் கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

  • தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்

  • மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழி வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய கடனில்ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரிகள், விஐபிகள், வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். உத்தியோ கத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

கும்பம்

  • கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள்.
  • நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். உடல் நலம்சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்

  • மீனம்: சந்திராஷ்டமம்  தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரவு குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு