12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்

இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகளுக்கு இடையிலான கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

"நமது ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது. நமக்கு ஒற்றுமையும் நாட்டின் இறையாண்மையும் மிகவும் முக்கியம். இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் இந்தியாவை தூண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளது" என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த கைகலப்பில் சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இன்று மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் கொரோனா தொற்று சூழல் குறித்து காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும் கலந்துரையாடலின்போது பிரதமர் மோதி இதனை தெரிவித்தார். மேலும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று இந்த விவகாரம் தொடர்பாக நாட்டு மக்களிடையே கோபமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் முன்வந்து என்ன நடந்தது என்பதையும், சீனா நமது நிலங்களை எவ்வாறு ஆக்கிரமித்தது என்பதையும், நமது வீரர்கள் 20 பேர் ஏன் உயிரிழந்தனர் என்பதையும், தற்போது என்ன சூழல் நிலவுகிறது என்பதையும் பிரதமர் தெரிவிக்க வேண்டும்," என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

"நமது ராணுவ வீரர்களில் எத்தனை பேரை காணவில்லை. எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது? இதை எதிர்கொள்வதற்கான நாட்டின் கொள்கை என்ன?"

"20 ராணுவ வீரர்களின் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. ராணுவ வீரர்களுக்கு எனது ஆழ்மனதிலிருந்து மரியாதை செலுத்துகிறேன். அதே சமயம் இந்த துயரை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.








இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு