வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகள், வடிகான்கள் என்பவற்றினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை நகர சபையினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகர சபை தவிசாளர் இ. கௌதமனின் தலைமையின் கீழ் வவுனியா நகர சபை செயலாளர் இ.தயாபரனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக வவுனியா இலங்கை தமிழ் கலவன் பாடசாலையை சூழவுள்ள பகுதி மற்றும் வடிகான்களை சுத்தப்படும் நடவடிக்கை வவுனியா நகர சபையினரினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
வடிகான்களில் தேங்கியுள்ள சேறு, மண்கள் அகற்றப்பட்டதுடன் அதன் பௌதீக சூழலில் காணப்பட்ட புற்கள் , குப்பைகள் என்பனவும் நகர சபை ஊழியர்களினால் சுத்தப்படுத்தப்பட்டன.
நகர சபையின் இந் நடவடிக்கை காரணமாக டெங்கு நுளம்பு பெருகுவது கட்டுப்படுத்தப்படும் என்பதுடன் மழையுடான காலப்பகுதியில் வெள்ள நீர் வழிந்தோட இலகுவாகவும் அமைந்துள்ளது.
மேலும் நகர சபையானது அன்மைய நாட்களில் வட்டார ரீதியாக பாரியளவிலான டெங்கு ஒழிப்பு திட்டத்தின் கீழ் திண்ம கழிவகற்றல் செயற்றிட்டத்தினையும் முன்னெடு்த்திருந்து வந்திருந்ததுடன் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..