23,Nov 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்-கமல்ஹாசன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கு முழு முனைப்பில் தயாராகி வருகின்றன.

அந்த வரிசையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

திராவிட கட்சிகளை தவிர வேறு யாருடனும் கூட்டணி வைக்க தயார் என கமல் அறிவித்திருந்தார். மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராகவும் அவரே இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என பேச்சுக்கள் அடிப்பட்டது.

இதற்கிடையே மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி அமைந்தால் மதுரை இரண்டாவது தலைநகர் ஆக்கப்படும் என கமல் அறிவித்திருந்தார்.

தற்போது வருகிற சட்டமன்ற தேர்தலில் தான் கட்டாயம் போட்டியிடுவேன் என கமல் அறிவித்திருக்கிறார்.

போட்டியிடும் தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நேர்மையை வைத்து போட்டியிடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.




சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்-கமல்ஹாசன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு