18,May 2024 (Sat)
  
CH
சினிமா

இணையத்தை மிரட்டும் ஷகிலா பட டிரைலர்!

மலையாள சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகை ஷகிலா நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் செம வரவேற்பு பெறும்.

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும். வெளியாகும் அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக் குவிக்கும்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரின் படங்களை விட அதிக அளவு வசூல் செய்து பிரமிக்க வைத்தார் ஷகீலா.

இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி படமாக்கியுள்ளனர். ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

முன்னதாக ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது ஷகிலா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






இணையத்தை மிரட்டும் ஷகிலா பட டிரைலர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு