28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

எச்சரிக்கை – உலகில் சுருங்கும் நீர்நிலைகள்!

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் பல்வேறு சூழலியல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதீத வெப்பம், பனிப்பாறைகள் அழிதல், பல்லுயிர்கள் மீதான தாக்கம் என காலநிலை நெருக்கடியின் பாதிப்புகள் நாளுக்கு நாள் உணரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் கடல்நீர் ஆவியாதல் மற்றும் மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்களால் ஏரிகளின் பரப்பு சுருங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஜஸ்டஸ் லிபிக் பல்கலைக்கழகம், உட்ரெக்ட் பல்கலைக்கழகம் மற்றும் நேச்சுரலிஸ் பல்லுயிர் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைப் போல் சூழலியல் பாதிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலகின் மிகப்பெரிய ஏரியான காஸ்பியன் கடலின் நீர்மட்டம் இந்த நூற்றாண்டில் 9 முதல் 18 மீட்டர் வரை குறையக்கூடும் என எச்சரித்துள்ள ஆய்வுக்குழு அதன் நீராதரமான வோல்கா நதியின் நீர்மட்டம் வழக்கத்தை விட குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஆய்வுக்குழு நீராதாரங்களில் ஏற்படும் பாதிப்பு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளது.




எச்சரிக்கை – உலகில் சுருங்கும் நீர்நிலைகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு