02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 2,249,873 ஆக உயர்ந்துள்ளது

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 104,010,950 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவர்களில் 2,249,873 போ் அந்த நோய்ப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 75,856,423 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 25,899,678 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 107,445 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,911,375 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 454,213 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,767,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 154,522 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,230,016 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 225,143 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை உலகளவில் 2,249,873 ஆக உயர்ந்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு