தென்மராட்சி, சாவகச்சேரி பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்தவர்கள் 17 வயதான யுவதியொருவரை பலவந்தமாக கடத்தி சென்றுள்ளனர்.
கடத்தல்காரர்கள் யுவதியின் தாயாரின் காலின் மேலாக வாகனத்தை ஏற்றிச் சென்றதில், அவர் படுகாயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி வடக்கு, சோலையம்மன் ஆலயத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று, அங்கிருந்த 17 வயது யுவதியை வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
வாகனத்தை தாயார் வழிமறிக்க முற்பட்ட போது, அவரை அடித்து வீழ்த்தியுள்ளனர். பின்னர் அவரது காலின் மேலால் வாகனத்தை ஏற்றி தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் காயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..