இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் 2020 ஓகஸ்ட் 12 ஆம் திகதி விக்டோரியா தெருவில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் ஹோட்டலின் 13 ஆவது மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என சிங்கப்பூரின் 'த ஸ்டார் டைம்ஸ்' நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் குறித்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிஷாத் மணில்கா டி பொன்சேகா என்ற நபர் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவராக உயர்கல்வி படிப்பை மேற்கொள்வதற்காக இங்கு வந்திருந்தார்.
கடந்த ஆகஸ்டில் கிராண்ட் பசிபிக் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, தனது அறையை விட்டு வெளியேறி தனது தனிமைப்படுத்தலை பலமுறை மீறிய பின்னர் அவர் தனது உயிரை தூக்கிட்டு மாய்த்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.இந் நிலையில் பெப்ரவரி 16 அன்று டி பொன்சேகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்றது.
ஒரு விசாரணை அதிகாரி மரண விசாரணை நீதிபதியான கமலா பொன்னம்பலத்திடம், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலைப்பட்டதால் பொன்சேகா தற்கொலை செய்து கொண்டதாக வலுவாக பரிந்துரைத்தார்.
0 Comments
No Comments Here ..