11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். .

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 13 ரன்கள் பின்தங்கி இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா 33 ரன்கள் மட்டும் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்சர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கிராலே (0) போல்டானார். மூன்றாவது பந்தில் பேர்ஸ்டோவ் (0) போல்டாக, ரன் கணக்கை துவக்கும் முன் 2 விக்கெட்டுகளை இழந்தது. சிப்லேயும் (7), அக்சர் ‘சுழலில்’ சிக்கினார்.

வழக்கம் போல ஸ்டோக்சை (25), வெளியேற்றிய அஷ்வின், ஆர்ச்சரை ‘டக்’ அவுட்டாக்கினார். இதையடுத்து டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தவிர இலங்கையின் முரளிதரனுக்கு (72 டெஸ்ட்) அடுத்து குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார் அஷ்வின். இவர் 77 டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். 

* இந்தியாவின் கும்ளே (619), கபில் தேவ் (434), ஹர்பஜனுக்கு (417) அடுத்து, 400 விக்கெட் சாய்த்த இந்திய பவுலர் ஆனார் அஷ்வின்.

 இவ்வரிசையில் ‘டாப்–5’ இந்திய பவுலர்கள் விபரம்:

வீரர் போட்டி விக்கெட்

கும்ளே 132 619

கபில்தேவ் 131 434

ஹர்பஜன் சிங் 103 417

அஷ்வின் 77 401

ஜாகிர் கான் 92 311

11 டெஸ்ட் அரங்கில் அஷ்வின் சுழலில் அதிக முறை சிக்கிய வீரர் ஆனார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். இவர் 11வது முறையாக நேற்று அஷ்வின் பந்தில் அவுட்டாக்கினார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை 10 முறை வெளியேற்றினார். இவர்களை தவிர, இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் (9 முறை), ஜேம்ஸ் ஆண்டர்சன் (7), ஆஸ்திரேலியாவின் கோவன் (7) ஆகியோரை அதிக முறை அவுட்டாக்கினார்.

600 ஸ்டோக்சை அவுட்டாக்கிய அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து, 600 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 77 டெஸ்டில் 401, 111 ஒருநாள் போட்டிகளில் 150, 46 ‘டுவென்டி–20’ல் 52 என மொத்தம் 603 விக்கெட் சாய்த்தார்.

* மொத்தம் 234 போட்டியில் இந்த மைல்கல்லை அடைந்த அஷ்வின், 7 முறை 10 விக்கெட்டுகள், 29 முறை 5 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.

* இந்தியாவின் கும்ளே (956 விக்.,), ஹர்பஜன் சிங் (711), கபில்தேவ் (687), ஜாகிர் கானுக்கு (610) அடுத்து, 600 விக்கெட் சாய்த்த ஐந்தாவது பவுலர் ஆனார் அஷ்வின். ஸ்ரீநாத் (551), ஜடேஜா (447), இஷாந்த் சர்மா (425) அடுத்த இடங்களில் உள்ளனர்.




டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தினார் இந்தியாவின் அஷ்வின். .

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு