நாளுக்கு நாள் பெட்ரோல் விலை ஏறுவதைப் போல யூடியூப் தளங்களில் சேனல்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுக்கு ஒரு முடிவே இல்லை தான் போல. கடந்த சில மாதங்களாக படவாய்ப்பு இல்லாத நடிகைகள் யூடியூபில் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் அந்தரங்க பிரச்சனைகளை தீர்க்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்துள்ளார். அதேசமயம் அந்த நிகழ்ச்சியில் பெண்களின் உள்ளாடைகளை பற்றிய கருத்துக்களையும் தெரிவிக்கவுள்ளாராம்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வெளிவந்த சூரியின் புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக நடித்தவர்தான் நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் ரேஷ்மா. தற்போது மூன்றாவது காதலருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்.
சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரேஷ்மா தற்போது ரேஷ்மா டாக்கீஸ் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.
அதில் அந்தரங்க பிரச்சனை முதல் அகில இந்திய பிரச்சனை வரை பேச உள்ளாராம். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு எந்த உள்ளாடை சிறந்தது என்பதையும், எதை உபயோகித்தால் எடுப்பாக இருப்பார்கள் என்பதையும் புட்டு புட்டு வைக்க உள்ளாராம் ரேஷ்மா பசுபுலேட்டி.
இதனால் தற்போது இந்த யூடியூப் சேனலுக்கு கிடுகிடுவென பாலோயர்ஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இளம் ரசிகர்களை எப்படி கவர வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு சேனல் ஆரம்பித்துள்ள ரேஷ்மா பசுபுலேட்டி விரைவில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.
0 Comments
No Comments Here ..