எவரெஸ்ட் சிகரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என தெரிகிறது.
எவரெஸ்ட் சிகரத்தில் மலை ஏறும் சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக எவரெஸ்ட் மலை அடியில் முகாமிட்டிருப்பவர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்களில் நார்வே நாட்டை சேர்ந்த எர்லண்ட் நெஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
தற்போது அவர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எவரெஸ்ட் மலை அருகே முகாமிட்டுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அச்சம் ஏற்படுள்ளது.
0 Comments
No Comments Here ..