11,May 2024 (Sat)
  
CH
சினிமா

எதிர்பார்ப்பை அதிகரிக்க அவ்ளோ செஞ்சும் இப்படி ஆயிடுச்சே

… அப்செட்டில் முன்னணி ஹீரோ! 

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் தான் அந்த நடிகர். இப்போது அந்த நடிகரின் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்துக்கான ஷூட்டிங்கே சமீபத்தில் தான் முடிந்தது. 

இன்னொரு படம் முடிந்து ரிலீஸ் தேதியெல்லாம் அறிவித்தார்கள். முதலில் தேர்தலால் தள்ளிப்போனது. அடுத்து கொரோனா இரண்டாம் அலையால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அந்த நடிகர் அவரது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் தான் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கு செம மாஸான ஒரு டைட்டிலும் வைத்து, சூப்பரான ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரெடி செய்திருக்கிறார்களாம். அதை இன்று (மே 1-ஆம் தேதி) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யலாம் என்று முதலில் அந்த நடிகர் ப்ளான் போட்டிருக்கிறார். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் படக்குழுவினர் அப்செட்டில் இருக்கிறார்களாம்.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





எதிர்பார்ப்பை அதிகரிக்க அவ்ளோ செஞ்சும் இப்படி ஆயிடுச்சே

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு