25,Apr 2024 (Thu)
  
CH
சோதிடம்

ஜோதிடத்தில் யோகங்களில் மிகவும் சிறப்பான உயர்வான யோகம்....

ஜோதிடத்தில் யோகங்களில் மிகவும் சிறப்பான உயர்வான வி.ஐ.பி. யோகம் என கருதப்படும் 9.ம் 10.ம் சம்மந்தபடும் அதாவது பாக்கியாதிபதியும் ஜீவனாதிபதியும் இணைவது 

இருவரும் சமசப்தமமாக பார்த்துக்கொள்வது

ஒருவருக்கொருவர் கேந்திரம் பெறுவது

இருவரும் பரிவர்த்தனை பெறுவது

இருவரும் சார பரிவர்த்தனை பெறுவது

போன்ற அமைப்புகளே தர்ம கர்மாதிபதி எனும் உயர்ந்த யோகமாகும்

இந்த யோகம் 12. லக்னங்களில் 3. லக்னங்களுக்கு மிகவும் சிறப்பை வாரி வழங்கும் என்பதே உண்மை அதாவது

கடகம் விருட்சகம் மீனம் ஆகியவையாகும்

கடகலக்னம் இது சர லக்னம் ஆகும்

தர்ம கர்மாதிபதிகளில் ஒருவரான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணியாதிபதியும் ஆவார் இது மிகவும் சிறப்பான அமைப்பு 

மேலும் 9. 10. க்குடைய இவர்கள் நட்பு கிரகங்கள் என்பதும் ஓர் அணியை சேர்ந்தவர்கள் என்பதும் மிக சிறப்பு 

9.க்குடைய குருபகவான் காலபுருஷனுக்கும்

9.க்குடையவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


அடுத்து விருட்சகம் இந்த லக்னத்திற்க்கு 9.10.க்குடையவர்கள் சந்திரபகவானும் சூரியபகவானுமே


இருவரும் நாம் அன்றாடம் நம் கண்களால்

பார்க்க கூடிய. நம்மை அன்றாடம் வழி நடத்தும்

கிரகங்கள் என்பதே மிகவும் சிறப்பு 


இருவரும் ஒரே ஆதிபத்தியம் பெறுவதும் சமசப்தமத்தில் சந்திரபகவான் பௌர்ணமி யோகம் அடைவதும் மிகவும் சிறப்பு 


10.க்குடைய சூரியபகவானின் தசாவை தொடர்ந்து 9.க்குடைய சந்திரபகவானின் 

தசா வரும் 9. 10. க்குடையவர்கள் நட்பு கிரகங்களாக வந்து அடுத்தடுத்த தசாவாக

வரும் அமைப்பு இவர்களுக்கு மட்டுமே 

இனி மீனம் இது உபயலக்னம் இந்த லக்னதிற்கு 9.10.க்குடையவர்கள் செவ்வாய்பகவானும் குருபகவானுமே

இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களே

கர்மாதிபதியான குருபகவானுக்கு லக்னாதிபதி ஆதிபத்தியம் உள்ளது இது மாபெறும் சிறப்பான அமைப்பு 

செவ்வாய்பகவான் காலபுருஷனான 1. இடத்திற்க்குறியவர் என்பதும் மிகவும் சிறப்பு

ஜனன ஜாதகத்தில் லக்னமும் லக்னாதிபதியும் சுப பலம் பெற்று யோகநாயகர்களில் ஒருவர் சுப பலம் பெற்று சரியான பருவத்தில் அவரின் தசாவும் வந்து விட்டால் ஜாதகர் நாடு தழுவிய 

வி.ஐ.பி. என்பது உண்மையே


இவன்

ஜோதிடர் 

பாலாஜி


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஜோதிடத்தில் யோகங்களில் மிகவும் சிறப்பான உயர்வான யோகம்....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு