16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பாகிஸ்தானின் மாம்பழ இராஜதந்திரம் -இலங்கை உட்பட பலநாடுகள் நிராகரிப்பு

பாகிஸ்தான் இராஜதந்திர ரீதியில் அனுப்பிய மாம்பழ பெட்டிகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் நிராகரித்து விட்டன.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கடந்த புதன்கிழமை 32 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாம்பழ பெட்டிகளை அனுப்பி வைத்தது.ஆனால் அவற்றை அமெரிக்கா, சீனா உட்பட பலநாடுகள் ஏற்க மறுத்துவிட்டதாக “இந்துஸ்தான் ரைம்ஸ்” தெரிவித்துள்ளது.


அத்துடன் கனடா, நேபாளம், எகிப்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் இந்த பரிசை ஏற்காததற்கு தமது வருத்தத்தை தெரிவித்துள்ளதாக குறித்த செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி சார்பில் இந்த நாடுகளுக்கு chaunsa வகை மாம்பழங்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான், வளைகுடா நாடுகள், துருக்கி, ஐக்கிய இராச்சியம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் மாம்பழங்களின் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.


பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு,மாம்பழ பெட்டிகளை பெற்றவர்களில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைப் பட்டியலிட்டுள்ளது, ஆனால் பாரிஸ் அது தொடர்பில் பதிலளிக்கவில்லை.




பாகிஸ்தானின் மாம்பழ இராஜதந்திரம் -இலங்கை உட்பட பலநாடுகள் நிராகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு