06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

வைரசால் குழந்தைகளுக்கு நோய் தீவிரம், இறப்பு வாய்ப்பு குறைவு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த குழந்தைகள், இளம்வயதினரில் 40 சதவீதம் பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், பாதிக்காது என்றும் முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறித்து இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி, பிரிஸ்டல் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர்.

இந்த ஆய்வு முடிவில், குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் கொரோனா வைரசால் தொற்றுநோய் தீவிரம் அடைவதற்கும், இறப்பு நேர்வதற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தெரிய வந்துள்ளது. அதிக ஆபத்து இருக்கிற இளைய வயதினர் எந்தவொரு குளிர்கால வைரஸ் மற்றும் பிற நோய்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த குழந்தைகள், இளம்வயதினரில் 40 சதவீதம் பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிக்கலான நரம்பு கோளாறுகள் உடைய குழந்தைகளும், இளம் வயதினரும் இறக்கும் ஆபத்து உடையவர்களாக உள்ளனர் என ஆய்வு முடிவு கூறுகிறது. அதே நேரத்தில் அனைத்து குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் ஆபத்து மிகக்குறைவுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் லோர்னா பிரேசர் கூறி உள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





வைரசால் குழந்தைகளுக்கு நோய் தீவிரம், இறப்பு வாய்ப்பு குறைவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு