03,Dec 2024 (Tue)
  
CH
ஆன்மிகம்

தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

செவ்வாய்க்கு அதிபதி முருகக்கடவுள். அதனால்தான், முருகப்பெருமானை மனதார வணங்கி வழிபட்டால், செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

கந்தக்கடவுளை, மந்திரம் சொல்லியும் ஜபித்து வழிபடலாம். ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் குறித்து சிலாகித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்

க்லெளம் ஸெளம் நமஹ


எனும் மூலமந்திரத்தைச் சொல்லி, முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக பெருமிதத்துடன் விவரிக்கிறார்கள் முருக பக்தர்கள்.

தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லி வேலவனை வணங்குங்கள். தினமும் 54 முறை சொல்லி ஜபிக்கலாம். 108 முறை சொல்லி வணங்கலாம். இந்த மந்திரத்துடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுங்கள்.

தினமும் கந்தசஷ்டிகவசம் சொல்லி, இந்த மந்திரத்தைச் சொல்லி, செந்நிற மலர்களால் அர்ச்சித்து வந்தால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நல்ல உத்தியோகமும் தள்ளிப் போன பதவி உயர்வும் கிடைக்கப்பெறலாம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தினமும் ஸ்கந்த குரு கவசம் சொன்னால் தீரும் பிரச்சனைகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு