14,May 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்

சென்னைக்கு தென்கிழக்கே 170 கி.மீட்டர் தொலைவில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால்- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை மையத்தால் கணிக்கப்பட்டது.

அதன்பின் கரையை கடக்கும் திசை மாறியதாக தெரிவித்த வானிலை மையம், கரையை கடக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, புதுச்சேரிக்கு மேற்கே 170 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடசென்னை அருகே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு