இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்தை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின் சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசாங்கத்திடமும் குறித்த ஆவணம் ஒப்படைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இக்கையெழுத்து போராட்டத்தில் அனைத்து கட்சிகளையும் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..