25,Apr 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

புலம்பெயர்ந்தவர்களுடன் பேசத் தயார் - அமெரிக்காவிடம் கோட்டாபய எடுத்துரைப்பு

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இன்று, (23) பிற்பகல் அரச தலைவர் அலுவலகத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் அரச தலைவரது செயலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் அரச தலைவர், திருமதி நூலண்ட் அவர்களிடம் தெரிவித்தார்.

அது பற்றி தனது பாராட்டைத் தெரிவித்த உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தான் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்த அரச தலைவர், வட மாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.





புலம்பெயர்ந்தவர்களுடன் பேசத் தயார் - அமெரிக்காவிடம் கோட்டாபய எடுத்துரைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு