29,Mar 2024 (Fri)
  
CH
உலக செய்தி

முதல்முறையாக பப்புவா நியூ கினியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்.!

அந்நாட்டு கலாச்சார முறைப்படி இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவை சந்தித்தார். 

சந்திப்பின் போது பப்புவா நியூ கினியாவில் பேசப்பட்டு வரும் டோக் பிசின் மொழிக்கு மாற்றப்பட்ட திருக்குறள் பதிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார்.


இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றது, இதன் போது இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 


இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் என்று பல்வேறு பிரிவுகளில் உறவை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேசியுள்ளனர். 


பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவுடன் பஎடுத்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

2014 ஆண்டு ஃபிஜிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. 


இந்திய பசிபிக் பகுதிகளில் சீனா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் பப்புவா நியூ கினியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.




முதல்முறையாக பப்புவா நியூ கினியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு