தென் அமெரிக்க நாடான கயானாவில் மாணவர் விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கயனாவின் மத்தியப் பிராந்திய நகரான மஹ்தியாவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர் விடுதியின் படுக்கை அறையில் ஞாயிற்றுக்கிழமை நல்லிரவு வேளையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், அங்கு தங்கியிருந்த மாணவர்கள் பலர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதனால், குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் கயானாவின் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது ஒரு பேரழிவு என கயானாவின் ஜனாதிபதி இர்பான் அலி கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..