கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான வழிபாடுகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெறும்.
திருவிழா தினமான 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
இதேவேளை, பெருவிழா திருப்பலிகள் அன்றையதினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் அன்ரனி ஜயக்கொடி ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
0 Comments
No Comments Here ..