மேஷ ராசி நேயர்களே!
செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.
ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.
செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மேஷ ராசி நேயர்களே!
செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.
ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.
செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
மேஷ ராசி நேயர்களே!
செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.
ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.
செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 2,7க்கு உடைய சுக்கிரன் உங்கள் ராசியில் மே 5 வரையிலும், அதன் பின்னர் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, சுகங்கள் அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு யோகாதிபதி 5ம் இடத்திற்குரிய சூரியன் மாதத்தின் முதல் பாதியில் உங்கள் ராசியிலும், அதன் பின்னர் 2ம் இடத்திற்கு அமர்ந்து மேன்மையான பலன்களைத் தர உள்ளார். அரசியலில் உள்ளவர்களுக்கு கெளரவமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.
10 இருக்கும் சனி ஆட்சி வக்கிரம் ஏற்படுவதால் சிலருக்கு கண் நோய் ஏற்படலாம். விரயங்கள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கணவன் மனைவி உறவில் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
பரிகாரம்:
செவ்வாய் மிதுன ராசியில் இருக்கும் போது மாதம் பிறப்பதால், முருகன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திரஷ்ட நாட்கள் :
மே 25, 26, 27 ஆகிய நாட்களில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய முயற்சிகள், பயணங்களைத் தவிர்க்கவும். இது மேஷ லக்கினத்திற்கும் பொருந்தும்.
மிகப்பெரிய மாற்றங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒருவருடத்திற்குப் பிறகு ராசிக்கு ராசிநாதன் சுக்கிர பகவான் சஞ்சாரம் நிகழ உள்ளது. அதோடு சூரியனும் மாதத்தின் மத்தியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
இதனால் எல்ல கிரக அமைப்பும் நல்ல வலுவானதாகிறது. எப்போது ராசியில் ராசி நாதனும் வலுவானதாக மாறுகிறதோ அப்போது உங்களின் பலம் அதிகரிக்கும். அதனால் உங்களின் செயல்பாடுகள், எண்ணங்களில் வெற்றி பெறும்.
தனவாக்கு, குடும்ப அதிபதி புதன் இந்த மாத தொடக்கத்தில் ராசியில் இருப்பது மேலும் விசேஷமாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய காலமாக இருக்கும்.
ரத்தம் சார்ந்த உறவுகள் மூலமும், பிள்ளைகளாலும் மிகவும் உன்னதமான பலன்களை நீங்கள் அடையலாம்.
மாத நடுவில் சூரியன் ரிஷபத்திற்கு வருவதால் உங்களுக்கு அரசு வழியில் உங்களுக்கு நடக்க வேண்டிய செயல் நடக்கும். வீடு மனை சார்ந்த வேலைகள் சிறப்பாக நடக்கும்.
தொழில், உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கி யோகம் தருவதாக இருக்கும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும்.
கலைத் துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம், யோகத்தை எதிர்பார்க்கலாம். அரசு துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டு கிடைக்கலாம்.
மாணவர்கள் சற்று கவனமாக படிக்க வேண்டியது அவசியம்.
மாற்றங்கள் உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் நீங்கள் நினைத்தபடி இருக்கும்.
பரிகாரம்:
அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயங்களுக்குச் சென்று வரலாம்.
சந்திராஷ்டம தினம் : 1,2,3, 27, 28, 29, 30
ரிஷப ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் மறைந்திருக்கின்றார். சுக்ரன் 6-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் என்பதால், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கேற்ப நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. அஷ்டமத்துச் சனி விலகி விட்டதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
ஜென்ம ராகுவின் சஞ்சாரம்
இம்மாதம் ஜென்மத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். ராகு சஞ்சரிக்கும் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், குருவின் வீட்டில் இருக்கின்றார். குரு பகவான் நீச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே அக்கறை செலுத்தாத காரியத்தில் கூட ஆதாயம் கிடைக்கும். ஏழில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினை ஏற்பட்டாலும், அதைச் சமாளித்து விடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கூட்டுக்கிரக யோகம்
உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ராஜ்ஜித ஸ்தானத்தில், மாதத் தொடக்க நாளில் சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய 5 கிரகங்களும் சஞ்சரிக்கின்றார்கள். இந்தக் கூட்டுக்கிரக யோகத்தின் விளைவாக பல நன்மைகள் உங்களுக்கு வரப்போகின்றது. குறிப்பாக உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். கவலைகள் அகலும். காரியங்களை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். வளர்ச்சிக்குரிய காரியங்கள் நடைபெறும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மகர ராசியில் ஜனவரி 21-ந் தேதி வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இந்த காலத்தில், குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினை, பிள்ளைகளாலும் பிரச்சினை என்ற நிலை உருவாகும். தன்னம்பிக்கையோடு அதைச் சமாளிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். அவர் சனியோடு சேர்ந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தில் இருந்தாலும், சூரியனும் அவரோடு இணைந்திருப்பதால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் நற்பலன்கள் கூடுதலாகவே கிடைக்கும். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் மதிப்பு, மரியாதை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். ராசிநாதன் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.
இம்மாதம் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 15, 19, 20, 25, 26, 30, 31 பிப்ரவரி: 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். பணத்தேவைஉடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள், உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் திருமண முயற்சிகள் கை கூடும் நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் திறமை பளிச்சிடும். அபிராமி அம்மன் வழிபாடு அனுகூலம் தரும்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
மிதுன ராசி நேயர்களே!
உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருக்கிறார். அதே போல குருவின் அதிசார பெயர்வில் 5ம் பார்வை பலன் உங்கள் ராசி மீது விழுவது விசேஷம்.
இதனால் மிகப்பெரிய நற்பலன்களைப் பெற்றிடலாம். உங்கள் ராசி மீது குருவின் பார்வை விழுவதால் அஷ்டம சனி பிரச்னை குறையும். அதே போல ராசியில் இருக்கும் செவ்வாயின் பலம் அதிகரிக்கவும் உதவும்.
ராசிக்கு ஒரு சுப கிரகத்தின் பார்வை கிடைப்பது மிக சிறப்பானது. இந்த மாதம் முழுவதும் குருவின் சுப பார்வை இருக்கும் என்பதால் உங்களுக்குத் தீய கிரக அமைப்பால் ஏற்படக்கூடிய பிரச்னை குறைவதற்கான நல்ல அமைப்பு உள்ளது. அதாவது உங்கள் ராசிக்கு 12ல் இருப்பதால் ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சினைகள், உடல் வலி போன்றவை தீரும்.
உங்களின் தொழில், வியாபாரம் மிக சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் புதிய வாய்ப்புகள், ஆர்டர்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய இடத்தில் வேலை, அல்லது இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இருந்த கஷ்டங்களும், இக்கட்டான நிலை நீங்கும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.
6ல் கேது அமர்ந்திருந்தாலும் கூட உடல் ஆரோக்கியம் சிறப்பாக தான் இருக்கும். சிறிய அளவிலான உடல் பிரச்சினை தரலாம்.
திருமணம் உள்ளிட்ட சுப காரிய வாய்ப்பை நீங்கள் செய்ய ஏற்றதாகும். திருமண முயற்சி கை கூடும். குழந்தை பாக்கியம் உண்டாக நல் வாய்ப்புள்ளது.
தொழில், வேலை என எது செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும் சூழல் இருக்கும். புதிய தொழில் தொடங்க, புதிய முயற்சி எடுக்க இந்த மாதம் உங்களுக்கு நன்மை தரும்.
சந்திராஷ்டம நாட்கள் ;
மே மாதம் 2, 3, 4, 5, 29, 30, 31
கடக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய கிரகங்களோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் எந்த ஒரு புது முயற்சியில் ஈடுபட்டாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மருத்துவச் செலவு ஏற்படலாம்.
பஞ்சம கேதுவின் ஆதிக்கம்
சர்ப்பக் கிரகமான கேது, இம்மாதம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். 5-ம் இடம் புத்திர ஸ்தானமாகவும் கருதப்படுவதால், பிள்ளைகள் பற்றிய கவலை மேலோங்கும். அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். கடன் சுமையால் ஒரு சில சொத்துக்களை விற்க நேரிடும். அதே நேரம் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பண நெருக்கடி அகல, புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பயணங்களில் இடையூறு இருக்கும்.
கண்டகச் சனியின் ஆதிக்கம்
உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சந்திரன், சூரியன், புதன், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களும், கூட்டுக்கிரக யோகத்தை வழங்குகின்றன. ராசிநாதன் சந்திரன், ராசியைப் பார்ப்பது யோகம்தான். ஏழாமிடத்தில் சனி சஞ்சரிப்பதால், அதை ‘கண்டகச்சனி’ என்று சொல்வது வழக்கம். எனவே உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் உட்பூசல்கள் அதிகரிக்கும். விரயாதிபதி புதன், சனியோடு இணைந்திருப்பதால் சகோதர வழியில் விரயங்கள் ஏற்படும்.
மகர - புதன் வக்ரம்
உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் ஜனவரி 21-ந் தேதி வக்ரம் பெறுகின்றார். பிப்ரவரி 10-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இந்த காலகட்டத்தில் சகோதர ஒற்றுமை குறையலாம். வழக்குகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. எதிர்பாராத இடமாற்றங்களால் மனக்கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருக்கின்றார். இருப்பினும் சனியோடு இணைந்து நீச்ச பங்கம் அடைகின்றார். ஜனவரி 22-ந் தேதி அவர் மேலும் வலிமை இழக்கின்றார். எனவே தந்தை வழியில் அனுகூலங்கள் குறையலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் வலிமை இழக்கும் பொழுது, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது வாகன யோகம் வரும். புகழ்மிக்கவர்களால் சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ‘கட்டிடம் கட்டியும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அந்தக் கவலை மறையும்.
இம்மாதம் தைப்பூசம், செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 19, 20, 24, 25, 30, 31, பிப்ரவரி: 3, 4 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் அதைவிட கூடுதலாக இருக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்தவொரு வேலையையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால், பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
சிம்ம ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு குரு, சனி, புதன், சந்திரன் ஆகிய கிரகங்களும் இணைந்திருக்கின்றன. விரயாதிபதி சந்திரனோடு, உங்கள் ராசிநாதன் சூரியன் இணைந்திருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அஷ்டமாதிபதி குரு நீச்சம் பெற்றிருப்பதால், இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்பு கிடைக்கும்.
பத்தாமிடத்து ராகுவின் ஆதிக்கம்
சர்ப்பக் கிரகமான ராகு, உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். இதன் விளைவாக தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்போடு புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடந்த தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
ஆறாம் இடத்தில் ஐந்து கிரகங்கள்
மாதத் தொடக்க நாளில் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில், சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தன லாபாதிபதி புதனும், விரயாதிபதி சந்திரனும் ஒன்று கூடும் இந்த நேரத்தில், கட்டுக்கடங்காத விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். 6-ம் இடத்து குருவால், மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். ஆனால் அவற்றால் பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி. அவர் 6-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிலருக்கு வேலை கிடைத்து பொருளாதாரம் உயரும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஒரு காரியத்திற்காக வைத்திருக்கும் தொகை, வேறு ஒரு வழியில் செலவாகலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. இக்காலத்தில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவதோடு, புதனுக்குரிய சிறப்பு வழிபாடுகளைச் செய்யுங்கள்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். அஷ்டமாதிபதி நீச்சம் பெற்று சஞ்சரிப்பது நன்மைதான் என்றாலும், சனியோடு கூடி நீச்சபங்கம் அடைகின்றார். அதோடு ஜனவரி 22-ந் தேதி அஸ்தமனம் ஆகிறார். இதனால் பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். புதிய திட்டங்கள் நிறைவேறும். நட்பால் நன்மை உண்டு.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகரத்திற்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு செல்லும் பொழுது, ஜீவன ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
இம்மாதம் ஞாயிறுதோறும் சிவபெருமானை வழிபடுங்கள்
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 21, 22, 26, 27, பிப்ரவரி: 1, 2, 5, 6, 7 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் சுபச்செலவு அதிகரிக்கும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் கூடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். என்றாலும், 6-ல் சனி இருப்பதால் சில சமயங்களில் விட்டுக்கொடுத்துதான் செல்ல வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். பொருளாதார நிலை சீராகும். தாய்வழி ஆதரவும், சகோதர ஒத்துழைப்பும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கலாம்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
கன்னி ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்தில் நான்கு கிரகங்களோடு கூடியிருக்கின்றார். தற்சமயம் அர்த்தாஷ்டமச் சனி விலகிவிட்டது. விலகிய சனியோடு குரு இணைந்து இருப்பதால், தடைக்கற்கள் இனி படிக்கற்களாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது.
மூன்றில் கேது, ஒன்பதில் ராகு
இம்மாதம் சகோதர மற்றும் சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கின்றார். எனவே உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படும். வழக்குகளில் இழுபறி நீடிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும்பொழுது, சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 9-ல் ராகு இருப்பதால் தந்தை வழி அனுகூலங்கள் குறையலாம். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க முயற்சிப்பீர்கள். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள்.
பலம் பெறும் பஞ்சம ஸ்தானம்
இம்மாதம் பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சூரியன், குரு, சனி, புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஒன்றுகூடி, கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்கு கிறார்கள். இது யோகம்தான். நற்பலன்அதிகம் கிடைக்கும். விரயாதிபதி சூரியன், சனியோடு கூடியிருப்பதால் விரயங்கள் அதிகரித்தாலும், பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதி யாகவும் விளங்குபவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்றாலும், புதன் உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் ஆரோக்கிய தொல்லை ஏற்படும். அதே சமயம் தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டு.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. ஜனவரி 22-ந் தேதி குரு பகவான் மேலும் வலிமை இழக்கின்றார். இருப்பினும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். புத்திக்கூர்மை யுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் ேசரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வழிபிறக்கும். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம்.
இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பொருளாதா ரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் உருவாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. கூட்டுக்கிரக யோகத்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
துலாம் ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சகாய ஸ்தானத்தில் இருக்கிறார். ‘தைரியகாரகன்’ செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே, தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து தொல்லைகளை போக்கிக் கொள்ள முன் வருவீர்கள். இரண்டில் கேது இருப்பதால் வாக்குறுதி கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது. ஆன்மிக பற்று அதிகரிக்கும்.
எட்டில் ராகு, இரண்டில் கேது
இம்மாதம் அஷ்டமத்தில் ராகு சஞ்சரிக்கிறார். மறைந்த ராகுவால் நிறைந்த தன லாபம் உண்டு. எனினும், தொழிலில் ஏற்ற இறக்க நிலையே காணப்படும். பழைய சேமிப்புகள் கரையலாம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்கள். இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து போகும். உறவினர்கள் உதவி செய்வதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். சர்ப்ப சாந்தி வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.
கூட்டுக்கிரக யோகம்
மாதத் தொடக்க நாளில் நான்காமிடத்தில், சூரியன், சந்திரன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் இணைந்து சஞ்சரிக்கின்றன. இதனால் ஓரளவு நன்மைகள் நடைபெறும். லாப ஸ்தானாதிபதியான சூரியன், நான்காமிடத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்தியாகும். தெய்வீக பற்று அதிகரிக்கும். அதே நேரத்தில் அர்த்தாஷ்டம குரு மற்றும் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்திற்காக செலவிட நேரிடும். சொத்துக்களை விற்க முன்வருவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் உண்டு. சகப் பணியாளர்களால் சில முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை மகரத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறும் பொழுது, தந்தை வழியில் அனுகூலங்கள் ஏற்படலாம். பாகப்பிரிவினை தாமதமாகும். பயணங்கள் அதிகரிக்கும். கட்டிய வீட்டை பழுது பார்ப்பதற்காக கணிசமான தொகையை செலவிட நேரிடும். வியாபாரப் போட்டி அதிகரிக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனி பகவானோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறார். அவரது பார்வை உங்களது ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரலாம். மேலும் ஜனவரி 22-ந் தேதி சூரியனோடு இணைவதனால், குரு பகவான் சற்று வலிமை இழக்கிறார். எனவே நீண்ட நாள் பாக்கிகள் வசூலாகலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தன வரவு திருப்தி தரும். நண்பர்களால் சில சிக்கல்கள் தீரும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வீடு கட்டி குடியேறும் எண்ணம் பூர்த்தியாகும். திட்டமிட்ட காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமியை வழிபடுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 14, 15, 26, 27, 30, 31, பிப்ரவரி: 5, 6, 7, 10, 11, 12 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் எதிலும் அதிக விழிப்புணர்ச்சி தேவை. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி உங்கள் சேமிப்பில் சிறிது கரையலாம். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும். பணிபுரியும் பெண்கள், மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நினைத்த இடத்திற்கு மாறுதலும் கிடைக்கும்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
விருச்சிக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். தன - பஞ்சமாதிபதியான குரு பகவான் நீச்சம் பெற்றாலும் சனியோடு இணைந்து ‘நீச்சபங்க ராஜ யோக’த்தை உருவாக்குகிறார். எனவே, பண வரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். உங்களுக்கு ஏழரைச் சனி விலகிவிட்டதால், தொட்டது துலங்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
ஜென்ம கேதுவின் சஞ்சாரம்
இம்மாதம் ஜென்ம ராசியில் கேது சஞ்சரிக்கிறார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணிகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பயணங்கள் பலன் தரும். சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
கூட்டுக்கிரக சேர்க்கை
உங்களுக்கு மூன்றாமிடமான வெற்றிகள் ஸ்தானத்தில் குரு, சனி, சூரியன், சந்திரன், புதன் ஆகிய 5 கிரகங்கள் இணைந்திருக்கின்றன. இதன் பலனாக இல்லம் கட்டி குடியேறும் ஆசை நிறைவேறும். சகோதரர்களின் கடமைகளை முடித்துக் கொடுப்பீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், சகாய ஸ்தானத்தில் குருவோடு இணைந்திருப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் பிறக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியான புதன் வக்ரம் பெறுவதால், மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்ளுங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளின் வாயிலாக செலவு வந்துசேரும். இடம், பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். புதனின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு, பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனி பகவானோடு இணைந்து ‘நீச்சபங்க ராஜயோகம்’ அடைகிறார். எனவே கல்யாண முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. ஜனவரி 22-ந் தேதி, குரு வலிமை இழப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். சப்தம விரயாதிபதி மூன்றில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்களால் பலன் கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பழைய வாகனங்களைக்
மேஷ ராசி நேயர்களே!
செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.
ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.
செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மேஷ ராசி நேயர்களே!
செவ்வாய் ராசி அதிபதி மேஷ ராசியில் அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் 1,2 ஆகிய பாதங்கள் அடங்கியது.
உங்கள் ராசிக்கு பாதகாதிபதி சனி. அசுவினி கேது, பரணி சுக்கிரன், கார்த்திகை சூரியனுக்குரிய நட்சத்திரம்.
ராசி நாதன் செவ்வாய்க்கு பகை வீடான சுக்கிரன் அதிபதியாகக் கொண்ட தைரிய வீரிய ஸ்தானமான மிதுன ராசியில் அமர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது மிதுன ராசிக்கு குருவின் 5ம் அதிசார பார்வை பலன் கிடைப்பதால் நன்மையே ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், பயண ஏற்படலாம்.
செவ்வாயின் 8ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுவதால், உங்களின் தொழில், வேலையில் எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் திறம்பட அவற்றை எதிர்கொண்டு நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் இவற்றில் வெற்றி பெறுவீர்கள்.
பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறுசிறு சலசலப்புகள் வந்தாலும் இறுதியில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெளியூர் வேலை வாய்ப்பு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
மிதுனராசி அன்பர்களே!
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். மாலை யில் குடும்பத்துடன் உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.
கடகராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தேவையான பணவரவு இருக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சி சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு உற்சாகமும், மகிழ்ச்சியும் தரும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சிம்மராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கண வன் - மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லை கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். புதிய வாடிக்கையாளரின் அறிமுகம் கிடைக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்ககும். அதனால் ஆதாயமும் உண்டாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.
கன்னிராசி அன்பர்களே! தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும் போது பொறுமை அவசியம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். ஆனால், பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
துலாராசி அன்பர்களே! மனதில் நிம்மதி ஏற்படும். தேவையான பணம் கையில் இருப்பதால் செல வுகளைச் சமாளிக்க முடியும். எடுத்த காரியங்கள் தடையின்றி முடியும். தாயின் உடல்நலனில் கவ னம் தேவை. வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டில் உறவினர்கள் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாக மாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் ஏற்படும்.
விருச்சிகராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.
தனுசுராசி அன்பர்களே! குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன் றைக்குத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங் களில் தடை, தாமதம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியா பாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம்.
மகரராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது சிலருக்கு வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் வரு கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். லாபம் வழக்கம்போலவே இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பராசி அன்பர்களே!
தேவையற்ற அலைச்சலும், அதனால் வீண் செலவுகளும் ஏற்படும். தேவையில்லாத குழப்பங்களின் காரணமாக எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் தவிப்பீர்கள். கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர் களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மீனராசி அன்பர்களே! எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும்.. அலுவலகத்தில் சக ஊழியர்களால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.