16,Jan 2025 (Thu)
  
CH
BREAKINGNEWS

2 மகள்களையும் கொன்றுவிட்டு புகையிரதம் முன்பு பாய்ந்த தந்தை!!

தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ். இவருக்கு கோபிகா (15) ஜோதிகா(12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மனைவியை இழந்த பின்னர், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அடையாளம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பயோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவரது இரு மகள்கள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


நேற்று காலை தனது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, சுமேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், குழந்தைகளை கொன்று விட்டு, சுமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.





2 மகள்களையும் கொன்றுவிட்டு புகையிரதம் முன்பு பாய்ந்த தந்தை!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு