2024-25 நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் இண்டிகோ நிறுவனம் 3,068 கோடி ரூபா (இந்திய பெறுமதி) இலாபம் ஈட்டியதாக அதன் தாய் நிறுவனமான இன்டர்குளோப் (InterGlobe) தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் 1,894.8 கோடி ரூபா இலாபம் ஈட்டிய நிலையில், தற்போது 62 சதவீதம் அதிகரித்து 3,068 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. இண்டிகோவில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 19.6 சதவீதம் அதிகரித்து 31.9 மில்லியனாக உயர்ந்துள்ளது.
மொத்த வருமானம் கடந்தாண்டு இதே காலாண்டில் 18,505.1 கோடி ரூபாவாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 23,097.5 கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. 2024-2025 நிதியாண்டில் 11.8 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக இண்டிகோ சிஇஓ பீட்டர எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்.பெருந்தொகை இலாபம் ஈட்டியுள்ள இண்டிகோ!
0 Comments
No Comments Here ..