ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் ஒரு இசை கலைஞர். தன் வருமானத்தில் பெரும்பகுதியை இசைக்கருவிகள் வாங்குவதில் செலவிட்டார். சிறு வயதிலிருந்தே ரஹ்மான் அதை ஆர்வமாக பயன்படுத்த தொடங்கியிருந்தார். ரஹ்மானின் 11வது வயதில் துரதிர்ஷ்டவசமாக அவர் தந்தை மரணமடைகிறார்.
அவர் இறந்த பின் வருமானம் இல்லை. உறவினர்கள் அந்த இசைக்கருவிகளை விற்று பணத்தை வங்கியில் போட்டு அதன்மூலம் குடும்பத்தை நடத்த அறிவுரை சொல்கிறார்கள். ஆனால் அதை மகனுக்கான மூலதனமாக பார்த்த ரஹ்மானின் தாய் அதை மறுக்கிறார்.
அன்று அவர் தன் மகனை நம்பாமல் அந்த இசைக்கருவிகளை விற்று கஷ்டமில்லாத வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். மகன் மீது வைத்த நம்பிக்கையில் கஷ்டத்திலும் விற்காமல் வைத்த அந்த இசைக்கருவிகளிலிருந்து புறப்பட்ட இசை தான் ரஹ்மானை ஆஸ்கர் வரை அழைத்து சென்றது.
வாழ்க்கையின் எந்த கடினமான சூழலிலும் அம்மாவிற்கு குழந்தைகள் மேல் ஒரு நம்பிக்கை இருக்கும். அது நீ ஜெயித்து என்னை பார்த்துகொள்வாய் எனும் சுயநலமல்ல. நீ ஜெயித்து உன்னை நன்றாக மாற்றிக்கொள்வாய் எனும் எதிர்பார்ப்பில்லாத அன்பு. அந்த நம்பிக்கை இங்கு நிறைய சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது.
"எல்லா புகழும் அன்னையருக்கே..!"
பெண்கள் இல்லாமல் இங்கு யாரும் இல்லை. பெண்களை போற்றுவோம்
அனைத்து அனைத்து நண்பர்களுக்கும் எம்மை
மற்றும் பின் தொடர்பாளராக இருக்கும்
தாய் வயதை சார்ந்த அணைத்து தாய்மார்களுக்கும்
எமது மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்
#அன்னையர்தினம்
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..