ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகமானது ஹைப்பர்சோனிக் வேகம் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஏவுகணை மணித்தியாலத்துக்கு 1400 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 'பத்தாஹ்' என இந்த இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் ஆற்றலை புகழ்ந்துள்ளதுடன், இது ஈரானின் தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனவும பிராந்திய நாடுகளுக்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டுவரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த ஏவுகணையின் அறிமுக வைபவத்தில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொஸைசன் சலாமி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த வைபவம் எங்கு நடந்தது என்பது அறிவிக்கப்படவில்லை
0 Comments
No Comments Here ..