05,Apr 2025 (Sat)
  
CH
TODAY PHOTOSS

கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு ஆலோசனை

பிரேசிலியா ஆஸ்பத்திரிகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிவதாலும், கர்ப்பிணிகளுக்கும் தொற்று அதிகமாக பரவிவிடுவதாலும், இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது.. அதன்படி கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்றும் அதை தள்ளிப்போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

உலக அளவில் உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனாவின் 2வது அலை பரவல்.. ஒட்டுமொத்த உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து அதன்கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களும் முடிந்தவரை விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றார்கள்.. எனினும் சில நாடுகள் மோசமாக சிக்கி கொண்டிருக்கின்றன. அதிலும் பிரேசில் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

நாள்தோறும் கொத்து கொத்தாக மடியும் உயிரிழப்புகளை தடுக்க போராடி வருகின்றது... அதாவது ஒருநாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்... இதுவரைக்கும் அதுபோல 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது இந்த கொரோனா.

குழந்தைகள்

இதில் அதிக அளவு பாதிக்கப்படுவது, பிறந்த பச்சிளம் குழந்தைகள்தானாம்.. அப்போதுதான் பிறக்கின்றன.. அப்போதே இறந்தும் விடுகின்றன.. பிறந்த குழந்தை கண்ணை சரியாக மூடுவதற்கு முன்பேயே மாண்டு போவது அந்நாட்டு அரசை நிலைகுலைய வைத்து வருகிறது.. அதனால்தான் சுகாதாரத்துறை ஒரு முடிவு எடுத்துள்ளது.. அந்த முடிவை ஆலோசனையாக அந்நாட்டு பெண்களுக்கும் வழங்கி உள்ளது.

அரசு ஆலோசனை

அதன்படி, கருவுருவதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமாறு கேட்டு கொண்டுள்ளது... ஏனென்றால், ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறார்கள்.. இந்த சூழலில், பிரசவத்துக்காக கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள்.. அப்படி அனுமதிக்கப்படும்போது, நன்றாக இருக்கும் அவர்களுக்கும் தொற்று எளிதாக பரவிவிடுகிறதாம்.. இது வயிற்றில் உள்ள குழந்தையையும் நேரடியாக பாதிக்க செய்கின்றதாம்.




கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு ஆலோசனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு