இலங்கையின் வானிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என இலங்கை வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்த நிலையில் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை வானிலை மையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
0 Comments
No Comments Here ..