21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில்

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், அரசு எடுக்கும் நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு, ஊரடங்கு தளர்வு, மது பான கடைகள் திறப்பு, அதற்கு எழுந்துள்ள ஆதரவு, எதிர்ப்பு ஆகியவை குறித்து பார்க்கலாம்.

சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னையில் பாதிப்பு அதிகரித்தாலும், உயிரிழப்பு குறைவாக உள்ளது.

*நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், புற்றுநோய் இருப்பவர்களை குடும்பத்தினர் நன்றாக பாதுகாக்க வேண்டும். மருந்துகளை சரிவர எடுக்க வேண்டும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்க கூடாது என கொரோனா தடுப்பு அதிகாரி கூறியுள்ளார்.

சென்னையில் ஏழு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59ஆக அதிகரித்துள்ளது.

மதுபானக் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மாநில பேரிடர் மீட்புக் குழு களமிறக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை திருவான்மியூரில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது முடக்கம் உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 லட்சத்து 59 ஆயிரத்து 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ 4 கோடியே 46 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

திருமழிசை சந்தை திறப்பதற்கு முன்பே, முறையான அறிவிப்பின்றி வந்த வாகனங்களை காவல் துறையினர் திருப்பி வைத்தனர்.

சென்னையில் இன்று மட்டும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் அங்குள்ள மதுப் பிரியர்கள் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செல்ல முயலும் நிலையில் எல்லையில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று மதுக் கடைகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த மதுக் கடைகள் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 3,320 பேர், பெண்கள் 1,507 பேர், திருநங்கைகள் 2 பேர்.

*நேற்று சென்னையில் மட்டும் 324 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அரியலூரில் 188 பேருக்கும், கடலூரில் 95 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 35ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்து நேற்று 31 பேர் வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1516 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,275ஆக அதிகரித்துள்ளது.

13, 413 பேருக்கு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 472ஆக உள்ளது.





கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு