குருநாகல் பேருந்து நிலையத்தினுள் பலத்த வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் சுமங்கல மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அதிக அடிமையான இவர் போதைப்பொருள் இல்லாததால் கத்தியால் குத்தி தன்னை தானே காயப்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த நபர் மீது இதற்கு முன்னர் 13 வெவ்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் போதைப்பொருளை பயன்படுத்த முடியாததால் கத்தியை எடுத்து கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்படுத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..