15,May 2024 (Wed)
  
CH
SRILANKANEWS

பல இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மீன்பிடி அதிகாரிகள் கடற்படையினருடன் இணைந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை தேடி நடவடிக்கை ஒன்றை நேற்று (25) மேற்கொண்டதில் 22 அரை இலட்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர். தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள் முறைப்பாடு செய்து வந்தனர்.

இதனடிப்படையில் கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகளான ஆர்.ஜீவானந்தன், ரி. பாலமுகுந்தன், ஆர்.ரஜீவ்கரன், வி. அமர்ராஜ் மற்றும் கடற்படையினர் இணைந்த குழுவினர் சம்பவதினமான நேற்று காலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


இதன் போது அந்த பகுதி கடற்கரையில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவான சட்டவிரோத வலைகளையும் சட்டவிரோத வலையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 2 அரை இலட்சம் ரூபா பெறுமதியான 3 தோணிகளையும் கைப்பற்றியதுடன் இதனை எவரும் உரிமை கோராத நிலையில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்கள் திணைக்களத்தின் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை இன்று (26) மட்டு. நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.




பல இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத வலைகள் மீட்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு