கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது இதேபோன்ற உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி அன்று, இடம்பெற்ற இந்த தாக்குதலில் 273 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்தாண்டு உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் 6,522 பொலிஸ் அதிகாரிகள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2,746 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..