22,May 2025 (Thu)
  
CH
BREAKINGNEWS

கடன் சுமையால் விபரீதம் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து கணவன், மனைவியும் தற்கொலை!!

சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா (12). இவர், எம்.கே.பி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

ஜெகநாதனுக்கு மணலியில் சொந்த வீட்டு மனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜெகநாதன் 40 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

இதனிடையே, ஜெகநாதனிடம் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜெகநாத் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

அதன்படி, இன்று காலை மகள் காவியாவை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று உடலை படுக்கை அறையில் சாய்த்து வைத்துள்ளார். பின்னர், ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் படுக்கை அரையில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மகள் காவியா படுக்கை அறையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கடன் சுமையால் விபரீதம் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து கணவன், மனைவியும் தற்கொலை!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு