15,Jun 2026 (Mon)
  
CH
SRILANKANEWS

இந்தோனேசியாற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி!!

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் எதிர்வரும் 20 ஆம் முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.




இந்தோனேசியாற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு